வ.ஐ.ச. ஜெயபாலன். United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 6000005: சுவடி).
163 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-93-80244-68-6.
ஈழத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராக அறியப்பட்ட வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு சமூக ஆய்வாளராக நின்று எழுதிய சில கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஈழத்து முஸ்லிம் மக்கள் தொடர்பாக அவர் எழுதிய 15 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. முடிவுறாத ஆய்வுகளும் முடிவுறாத கனவுகளும், தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மக்களும் விடுதலைப் புலிகளும், தமிழர் பிரச்சினைக்கு அரசும் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு புலிகளும் தீர்வை முன்வைக்க வேண்டும், முஸ்லிம் மக்களும் ஒரு சில கனவுகளும், முஸ்லிம் மக்களும் ஒரு சில சிந்தனைகளும் மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் மலையக மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும்: தமிழ் மக்களே தலைவர்களே உங்கள் பதில் என்ன?, ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்கக் கடிதம், முஸ்லிம் காங்கிரசும் அதன் வரலாற்றுக் கடமையும், தமிழர்களே வடபகுதி முஸ்லிம்களை வரவேற்கத் தயாராகுங்கள், வரலாறும் புதிய வரலாறும், கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ, ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம், தம்பி சற்று மெலிந்ததனால் அண்ணன் தானடிமை கொள்ளலாமோ? ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் என்ற நூலின் முன்னுரையும், பதிப்புரையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.