9972 பண்டைத் தமிழர்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் ஆய்வுக்கட்டுரைகள்.

சுவாமி ஞானப்பிரகாசர் (மூலம்), ஜெ.அரங்கராஜ் (தொகுப்பாசிரியர்). United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ,  1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 6000005: சுவடி).

200 பக்கம், விலை:  இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ. ISBN: 978-93-80244-95-2.

இந்நூல் சுவாமி ஞானப்பிரகாசரின் பண்டைத்தமிழர் என்ற பிரபல்யமான கட்டுரையுடன், பூனையும் பூசையும், பனையின் பெயர்கள், தண்ணீரும் எண்ணெயும், 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் நாட்டெல்லை, தமிழ்ப் பாஷையின் விசித்திரங்கள், தமிழில் உள்ள நிறச் சொற்கள், தவறான மனப்பதிவைத்தரும் சரித்திரக் குறிப்புகள், பழையவற்றில் பழைய குறள் வெண்பாக்கள், பண்டைய மக்களின் பொது இருப்பிடம், குடஞ்சுட்டு, இலக்கணமும் இலக்கியமும் ஆகிய மற்றைய கட்டுரைகளுமாக மொத்தம் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பண்டைத்தமிழர் என்ற பிரதான கட்டுரை, ஒரு புதிய கொள்கை, தமிழரின் முன்னைய இருப்பிடக் கொள்கைகள், மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளில் தமிழரின் முன்னோர், ஒத்த ஐதீகங்களும் பழக்க வழக்கங்களும், பழங்கால எழுத்துமுறை, மேற்காசியாவிலும் ஐரோப்பாவிலும் தமிழ் இடப்பெயர்கள், குறிப்பான தெய்வ வழிபாடுகள், பணியர்களும் பண்டு தேசமும், பரத கண்ட தமிழர் நாகரிகம் ஆகிய ஒன்பது உபதலைப்புகளைக்கொண்டது. இது உலகின் ஆதித் தாய்மொழியாகத் தமிழினை முன்வைத்து, தமிழர்தம் ஆதித் தாயகமான நடுநிலக் கடற் பகுதியிலிருந்து சிந்துவெளிக்குப் பரவிப் பின்னர் தென்னிந்தியாவை வந்தடைந்தார்கள் என்னும் கருத்தை நிறுவும் வகையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் என்ற சஞ்சிகையிலே தொடராக எழுதிவந்த கட்டுரையாகும்.  தொகுப்பாசிரியர்  முனைவர் ஜெ.அரங்கராஜ் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். தஞ்சாவூர்  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தன் கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற இவர், மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் செந்தமிழ் மாத ஆய்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

Bonus Salle de jeu Sans nul Conserve

Satisfait Pokerstars : Ce Aisé En Va-tout Un tantinet En compagnie de Pourboire Sans Conserve: majestic forest 1 $ de dépôt ‍‍quel autre Levant Le