9993 வன்னி: வரலாறும் பண்பாடும்.

கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் (பதிப்பாசிரியர்). நோர்வே: கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம், 1வது பதிப்பு, ஜுலை 2014. (சென்னை 600026: குமரன் வெளியீட்டாளர்கள், இல.3, மெய்கை விநாயகர் தெரு, வடபழநி)

xx, 655 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ., ISBN: 978-82-303-2572-8.

இலங்கையின் வன்னி மாவட்டம் பற்றிய வரலாறு, பண்பாடு பற்றிப் பல்வேறு அறிஞர்களாலும் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்நூல், தொல்லியலும் வரலாறும், சமூகமும் வாழ்வியலும், சமய நெறிகளும் பண்பாடும் என மூன்று அடிப்படைக் கூறுகளை மையப்படுத்துகின்றது. தொல்லியலும் வரலாறும் என்ற முதலாவது பிரிவில், சி.பத்மநாதன் (வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு, மாதோட்ட நகரம், அடங்காப்பற்று வன்னிபங்கள்), ப.புஷ்பரட்ணம் (வன்னியின் வரலாறும் பண்பாடும்: அண்மைக்கால தொல்லியற் கண்டுபிடிப்புகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு), பொ.இரகுபதி (ஈழத்தில் வன்னி என்ற சொல்வழக்கு), ஜெயமோகன் (வரலாற்றெழுத்தின் வரையறைகள்), சிவ.தியாகராஜா (வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு), செல்லையா கிருஷ்ணராஜா (போர்த்துக்கீச ஒல்லாந்தர்கால யாழ்ப்பாணம்: வன்னி வாணிபத் தெருக்கள்), சி.க.சிற்றம்பலம் (வரலாற்றுக் காலத்திற்கு முந்திய வன்னிநாட்டின் தொல்லியற் சான்றுகள்), மு.நித்தியானந்தன் (ஜே.பி.லுயிஸ் வன்னியின் ஆவணச் சிற்பி), கா.இந்திரபாலா (The Origin of the Tamil Vanni Chieftaincies of Ceylon), ச.அனித்தா (பிரித்தானியர்கால வன்னி இராச்சியம்), அருணா செல்லத்துரை (பண்டாரவன்னியன்), தி.திபாகரன் (வன்னி பெருநிலப் பரப்பில் ஆய்வுக்குட்படுத்தவேண்டிய தொல்லியல் மையங்கள்), செல்வி ஜெயரூபி (யாழ்ப்பாண இராசதானிக் காலத்தில் வன்னிமைகள்), அம்பலவாணர் மயூரன் (பாலியாற்றங்கரைக் குடியிருப்பும் அதன் வளர்ச்சிப் போக்கும்-வரலாற்றுரீதியான பார்வை), ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமூகமும் வாழ்விலும் என்ற பிரிவில் சரத் விமலபண்டார கோட்டகம (Birds of Vanni District), கே.குகபாலன் (வன்னிப் பிரதேசத்தின் அண்மைக்கால மாற்றங்களும் மீள்குடியேற்றங்களும்), கந்தையா சண்முகலிங்கம் (ஜே.பி.லுயிஸ் இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு கையேடு என்றநூல் பற்றிய அறிமுகம்), ச.சத்தியசீலன் (இலங்கையில் தமிழ்ப் பாரம்பரியப் பிரதேசங்களும் அரச குடியேற்றத் திட்டங்களும்), சூசை ஆனந்தன் (வன்னிப்பிரதேச மீன்பிடித் தொழில்), இரா.சிவச்சந்திரன் (வன்னிப் பிரதேசம்: விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்), நா.சண்முகலிங்கன் (வேரோடு பிடுங்குதலும் மீள்நடுதலும்: வன்னிக் குடும்பங்களின் சமூக நிலை), த.கிருஷ்ணமோகன் (இலங்கையின் வன்னிப் பிரதேச சட்டசபைப் பிரதிநிதித்துவம்), சுபாஜினி உதயராஜா (பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள்), எஸ்.உதயகுமார், ஞா.கீதாவினி (பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலை), க.கிருஷ்ணராஜா (குடியேற்றத்திற்குப் பின்னரான அபிவிருத்திக்குரிய சமூகநிலை), எஸ்.சிவதாஸ் (வன்னி ஆன்மா), ஜோசப் பாலா (வளங்கொண்ட வன்னிப்பிரதேசத்தின் வாழ்வியல் அனுபவங்கள்), வின்சன்ற் பற்றிக் (மனிதம் மலரட்டும்), சிவாஜினி சிவசங்கர் (வன்னி மாவட்ட வனம்), சி.தமயந்தி (வன்னி மாவட்ட வளர்ச்சிப் படிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள்) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவான சமய நெறிகளும் பண்பாடும் என்ற பகுதியில் நா.சுப்பிரமணிய ஐயர் (வன்னிப்பிரதேச தமிழ் இலக்கியம்), பார்வதி கந்தசாமி (வன்னியின் பெண்மையின் பக்கங்கள்), உ.சேரன் (மொழியால் அமைந்த நிலம்), த.சிவபாலு (வன்னிப்பிரதேசம்: தனித்துவமும் பண்பாடும்), ம.இரகுநாதன் (வன்னிப்பிரதேச நாவல்கள்), முல்லைமணி வி.சுப்பிரமணியம் (வன்னி நாட்டார் இலக்கியம்), நா.யோகேந்திரநாதன் (வன்னிச் சிறுதெய்வ வழிபாடு), இ.அனுஜா (திருக்கேதீஸ்வரம்), ச.இராசேஸ்வரன் (வற்றாப்பளைக் கண்ணகித் தெய்வம்), ம.க.அருள்பிரகாசம் (தூய மடுமாதா திருத்தல வரலாறு), எஸ்.கஜானா (வன்னியில் சமய நிலை), வ.ஐ.ச.ஜெயபாலன் (ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்-நெடுங்கவிதை) ஆகியோரின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Boku Casinos

Content How to Withdraw From the Web based casinos With Boku – Kerching casino login Simply how much Do i need to Put Having Boku?

Vídeo Bingo Online Acostumado

Content Afimdeque Deve Aparelhar Bingo Online Através Puerilidade Nosso Site Perguntas Frequentes Acercade O Bingo Turbo H Narrativa Abrasado Bingo Abicar Brasil Principais Diferenças Intervalar