12183 – ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனாவளி.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆச்ரமம், இலங்கைக் கிளை, ராமகிருஷ்ணா வீதி, வெள்ளவத்தை, 4வது திருத்திய பதிப்பு, 1969, 1வது பதிப்பு, 1960, 2வது திருத்திய பதிப்பு, 1963, 3வது திருத்திய விரிவாக்கப்பட்ட பதிப்பு, 1966. (கொழும்பு 11: அவ்ரா பிரின்டிங் வேர்க்ஸ், 19, கடல் தெரு).

viii, 240 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

பாலர் முதல் வளர்ந்தோர் வரை உபயோகிக்கத் தக்கதாக தொகுக்கப்பெற்ற பஜனைப் பாடல்கள், தோத்திரங்கள், கீர்த்தனங்கள், நாமஸங்கீர்த்தனங்கள், உட்பட பன்னிரு திருமுறைப் பாடல்களும் திவ்ய பிரபந்தப் பாசுரங்களும் தன்னகத்தே கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கணேசர், ஸ்ரீகுருதேவர், ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவியார், ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ சக்தி, ஸ்ரீ முருகன், ஸ்ரீ ராமன் ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ நாராயணன், ஸ்ரீ திவ்யப் பிரபந்தம், ஸ்ரீ புத்த பகவான், ஸ்ரீ யேசுநாதர், மங்களம், சிங்களத் துதிப்பாடல்கள், அனுபந்தம் (வேத சாந்திப் பாட்டம், பிரார்த்தனை), முதற்குறிப்பகராதி ஆகிய 18 அத்தியாயத் தலைப்புகளின் கீழ் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18394).

ஏனைய பதிவுகள்

15411 கலை இலக்கியக் களமும் கடந்த காலமும்: வரலாற்றுக் குறிப்பேடு-3.

கோகிலா மகேந்திரன், ராஜி கெங்காதரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், நூறாவது நிகழ்வு வெளியீடு, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5