12776 – தேடலின் வலி (கவிதைகள்).

ரமேஷ் வவுனியன். ஜேர்மனி: ரமேஷ் வவனியன், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: கலைமகள் அச்சகம், இல. 50, சந்தை சுற்றுவட்ட வீதி).

94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5 x 12.5 சமீ.

புலம்பெயர் வாழ்வில் ஏற்படும் அவலத்தின் தாக்கத்தினால் உள்ளத்தில் ஏற்படும் உணர்வின் அதிர்வுகளாக இக்கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. ரமேஷ் வவுனியன் இலங்கையில் வவுனியா நொச்சிமோட்டையில் பிறந்தவர். இவரது பெற்றோர் வீரசிங்க வவுனியன்-கமலநாயகி ஆகியோராவர். தற்பொழுது யேர்மனியில் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். மாணவனாக இருந்தபோது 1988இல் ‘தமிழ் மாணவர் நற்பணி மண்றம்’ எனும் அமைப்பை இலங்கையில் தோற்றுவித்தார். பின்னர் ஜரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து ‘தமிழ் இணைய வானொலி’ எனும் இணைய வானொலியை இரண்டாயிரம் ஆண்டு யேர்மனியில் ஆரம்பித்தார். யேர்மனியிலிருந்து வெளியான ‘இளைஞன்’ சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் இருந்தார். கவிஞரான இவர், பல வானொலி நாடகங்களை எழுதி தயாரித்து நடித்துமிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12152 – திருவாசகம்-சிவபுராணம்.

க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: கு. பூரணானந்தா, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, தை 1953. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின் சிவபுராணம்