12904 – சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்.

ஆறு. திருமுருகன். கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1ஃ1, காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(8), 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 14.5 சமீ.

சைவமும் தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப்பகுதியிலே நல்லூரில் தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். சைவம் நலிவுற்ற நிலையில் தன் சொல்லாலும் எழுத்தாலும் மக்களின் அகக்கண்களைத் திறந்து அவலநிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். ஈழத்தமிழரின் சமய, சமுதாய வரலாற்றிலே ஆறுமுகநாவலர் என்றும் போற்றத் தக்கவர். அத்தகைய சிறப்புமிக்க நாவலர் பெருமான் தொடர்பாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிவதற்காக இந்நூல் அவரது வாழ்வும் பணிகளும் பற்றிய சுருக்க விளக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12428 – பல்கலை: தொகுதி 07, இதழ் ; 01: 2015

. வீ.மகேஸ்வரன், பீ.எம்.ஜமாஹிர் (இணையாசிரியர்கள்), கே.ஞானேஸ்வரன் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: கலைப்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 108 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 24.5×17