16428 யாழ்ப்பாண அரசர் காலத்தில் வாழ்ந்த விகடப் புலவர் கதைகள்.

 சபா ஜெயராசா. கொழும்பு: அரக்கற் (Arakkatu) வெளியீடு, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

23 பக்கம், சித்திரம், விலை: ரூபா 400., அளவு: 30×22 சமீ., ISBN: 978-624-5781-18-6.

வாய்மொழி மரபுகளுடன் கற்பனை நீட்சியையும் உள்ளடக்கிய இலக்கிய வகைமைக்கு ‘இணைப் புனைவியல்” (Cofiction) என்று பெயரிடப்படுகின்றது. சிறுவர் இலக்கியப் பெரும்பரப்பின் வளர்ச்சிக்கு இந்த வகைமை விசையூட்டி வருகின்றது. புலவரும் ஓட்டைப்பானையும், அரசர் முன்னர் அறிந்திடாத உணவு, அமைச்சரும் மண்வெட்டியும்,  குதிரையுடன் மோதிய சேவகர், முதலமைச்சரும் அழுகிய தேங்காயும், மருந்துப் பொருளை அறியாத அமைச்சர், காட்டின் நடுவில் ஒரு கல்விக்கூடம், கள்வனும் பணமுடிச்சும், குதிரைக்கு வந்த சோம்பல், நல்லூரில் ஒரு சுவடிக்கூடம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட அத்தகைய பத்து சிறுவர் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு மலர்ச்சியை சிறுவயதிலிருந்து வளர்த்தெடுக்கும் செயற்பாடு, வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வி முறைமையின் உட்கூறாகப் பொதியப்பட்டுள்ளது. கல்வியின் தர முன்னேற்றம் பற்றிய சமகாலக் கருத்தாடல்களில் வாசிப்பின் இருப்பு ஒரு முக்கிய எழுபொருளாக முன்வைக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அத்தகைய வாசிப்பின் தொடர் இருப்புக்கு இத்தகைய சிறுவர் இலக்கியங்களின் வருகை இன்றியமையாதன.

ஏனைய பதிவுகள்

Blackjack Online Online game MeTV

Blogs Play Black-jack Game On line To increase payouts and relieve dangers, cards counters modify its wager models with regards to the count’s true well