16473 இசையுடன் பாட அழகான தமிழ்ப் பாடல்கள்.

கீர்த்தி. (இயற்பெயர்: குமரேஸ்வரன் கீர்த்திசிங்கம்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

x, 166 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.

இசையுடன் பாடக்கூடிய அழகான தமிழ்ப் பாடல்கள் 49உடன் ‘செம்புலக் காதலி” என்ற திரை நாடகமும், கதைச் சுருக்கத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று சென்னைப் பல்கலைக்கழகம், வடக்கு லண்டன் பல்கலைக்கழகம், கிரினிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர்கல்வி கற்று தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்பவர் கீர்த்தி.

ஏனைய பதிவுகள்

13024 கிராமிய பூபாளம் 2019: வரலாற்றைப் படித்து வரலாற்றைப் படைத்து வரலாறாகி நிற்கும் தொண்டர் திருவுக்கு அகவை 80இல் திருவுருவச் சிலை: சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மாவிட்டபுரம்: அக்ஷதா பதிப்பகம்).44 பக்கம்இ வண்ணப்படத் தகடுகள்இ விலை: அன்பளிப்புஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவு

14513 நாடகமும் அரங்கியலும்: பரீட்சை வழிகாட்டி.

வனிதா-சுரேஷ். களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா-சுரேஷ், வாகரையார் வீதி, களுதாவளை-01, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 81, முனை வீதி). (4), 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175.,