வே.அழகேசன். யாழ்ப்பாணம்: வே.அழகேசன், 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், (288), 536, ஆஸ்பத்திரி வீதி).
பக்கம் 375-722, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
கணக்கியற் சுருக்கம் நூலின் முதற்பாகம் 374 பக்கங்களில் வெளிவந்துள்ள நிலையில் இவ்விரண்டாம் பாகம் தொடர் பக்க இலக்கங்களுடனும் அத்தியாயங்கள் 10 முதல் 21 வரையிலுமான விடயதானங்களுடன் வெளிவந்துள்ளது. இவ்விரண்டாம் பாகத்தில் வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, மீட்டல் அப்பியாசம் ஐஐ, ஒப்படைக் கணக்குகள், பங்குடமை, தற்சமனாக்கும் பேரேடுகள், பரும்படிச் செய்கைக் கணக்கு, பகுதிக் கடைக் கணக்குகள், கூட்டு முயற்சிக் கணக்குகள், கொள்ளல் கொடுத்தற் கணக்குஃவருமானச் செலவுக் கணக்கு, நிறைவில் பதிவுகளிலிருந்து கணக்குகள் தயாரித்தல், மீட்டல் அப்பியாசம் ஐஐஐ, வினாப் பத்திரங்கள், விடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35322).