உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1994. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 1 B, P.T. டீ சில்வா மாவத்தை). 52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ. நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதற் பகுதியில் சிங்கள அலங்கார வடிவங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பகுதியில் தாவர அலங்கார வடிவங்கள் பற்றியும், மூன்றாம் பகுதியில் பிராணிகளினதும் கற்பனையானதுமான அலங்காரங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சடத்துவமான வடிவங்கள், பொழிப்பு, பிற்சோதனை, ஒப்படைகள், விடைகள் என்பன தரப்பட்டுள்ளன. நூலாக்கக் குழுவின் அங்கத்தவர்களாக சுகிரிபால மாரியம்பட, ஜீ.ஜீ.ஈ.ஜயவீர, டீ.எம்.எஸ்.பிரேமானந்த, மிரண்டா ஹேமலதா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23297).