13699 பாரிசாதப் பூக்கள் (பாரிசாத மலர்கள்).

கதிர் சீனித்தம்பி. வல்வெட்டித்துறை: கதிர் சீனித்தம்பி, கதிர் வெளியீடு, புலவர் கோட்டம், இலக்கணாவத்தை, உடுப்பிட்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (உடுப்பிட்டி: செல்வா பிறின்டேர்ஸ், நாவலடி).

ii, 76 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ.

ஆசிரியரின் கவிதைகளும் கட்டுரைகளும் இணைந்ததொரு தொகுப்பு. கவிதைப் பகுதியில் இலைகளாய் உதிரும், விடிவெள்ளி பூக்குமா?, வீட்டுச் சிறைக்குள்ளே, அன்பில் நனைந்த அறிவு, பெண்ணின் பெருந்தக்க யாவுள, தாய்மை நெஞ்சம், அன்பின் பரிமாணம், அலங்கோலம், அழுக்காறு, காதலித்துப்பார் அவளை, நிஷாப் புயல், திரு பாலசிங்கம் ஆசிரியருக்குப் பாராட்டு, குயிலே குரல் ஒன்று தருவாய், துன்பத்தின் ஆணிவேர் ஆசை, தாலாட்டில் எனை மகிழவைக்கும் இன்பமே, வள்ளுவம், சந்நிதி வேலவன், சிரிப்பு, சிந்தித்து எழுந்துவிடு பாரதியைத் தரிசிக்க, யாழ். உடுப்பிட்டியில் அமைந்ததொரு கலைக்கோயில், மனித வாழ்க்கையும் முதுமையும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 21 கவிதைகளும், கட்டுரைப் பகுதியில் வான்புகழ் கண்ட வள்ளுவன், தமிழ் மொழி, தொல்காப்பியர், நெஞ்சை அள்ளும் சிலம்பு, பெண்ணே மானிடத்தின் முதன்மை, குழந்தைப் பாடல், கவிப்புலவன் பாரதி, அழுக்காறு, திரிகடுகம், ஊழ்வினைச் சிலம்பு, வள்ளுவன் காட்டும் பொருளாதாரக் கொள்கை, காப்பியம் காட்டும் சிலம்பும் மணியும், கல்வியும் சமூகமும் ஆகிய தலைப்புகளில்; எழுதப்பட்ட 13 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17186 யாழ்பாடி கலாசார மலர்-3.

ம.மேர்சி சுஜந்தினி (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

16862 இலங்கை-மலையக “கானக நிலா” கல்லிடைக்குறிச்சியார்.

மானா மக்கீன் (இயற்பெயர்: எம்.எம்.மக்கீன்). சென்னை 600015: தாழையான் பதிப்பகம், 1வது தளம், 26/1, மசூதி பள்ளம், 1வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை 14: யுனிவர்சல் பிரின்ட்ஸ்).