மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13.5 சமீ.
கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினரால் புனராவர்த்தனம் செய்விக்கப் பெற்ற வித்தக விநாயகர் ஆலயத்தின் நூதனபிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம் 31.08.2003 அன்று நடந்தேறிய வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். பலானை கண்ணகிதேவி வந்தமர்ந்த காலத்தில் தற்போது கல்வியியற் கல்லூரி அமைந்துள்ள இடமும் கோயிலின் ஏனைய சூழலும் கண்ணகி வழிபாடு செய்வோர் வந்து தங்கிய இடங்களாக இருந்தனவென்றும், வழிபாட்டாளர் முடிமன்னர் வைரவரையும் விநாயகரையும் சேர்த்து இவ்விடத்தில் வழிபட்டதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பினை ஆசிச் செய்தி வழங்கிய அருட்கவி சீ.விநாசித்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34953).