கிருஷ்ணா சிவப்பிரகாசம் (மலராசிரியர்). கனடா: ஸ்ரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, ஜுலை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xliii, 84 பக்கம், தகடுகள், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
மேற்படி ஆலயத்தில் 02.07.2011 அன்று இடம்பெற்ற முப்பத்து மூன்று ஹோம குண்ட உத்தமயாக மஹா கும்பாபிஷேகம் தொடர்பாக வெளியிடப்பெற்ற ஆலயச் சிறப்புமலர். இம்மலரில் கனேடிய அரசாட்சிபீடம், ஆன்மீக பீடங்கள், இந்து மத ஸ்தாபனங்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்துரைகளும் ஆச்சார்ய ஆசிகளும், குருவணக்கங்களும் முன்பகுதியில் இடம்பெறச்செய்து, பிற்பகுதியில் சமயம்சார்ந்த கட்டுரைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.