9028 கருத்துக் கொலைக்கு இரையானோர்.

சீதா ரஞ்சனி. கொழும்பு 5: சுதந்திர ஊடக இயக்கம், இல. 96, கிருள வீதி, நாரஹேன்பிட்டி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: சமயவர்தன அச்சகம், இல.53, மாளிகாகந்தை வீதி).

(2), 131 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0583-02-7.

இலங்கையில் ஊடக அடக்குமுறை உச்சகட்டத்தில் இருந்த 1981-2009 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஊழியர்கள், கலை, கலாசாரச் செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது. முதலாம் பிரிவில் அறிமுகம் இடம்பெறுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடக ஊழியர்கள் மற்றும் கலை, கலாசார செயற்பாட்டாளர்களின் பெயர்ப்பட்டியல் இரண்டாவது பிரிவில் தரப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் தொடர்பான சிறு குறிப்புகள் மூன்றாம்  பிரிவில் தரப்பட்டுள்ளது. பிரதான பட்டியலில் இடம்பெற்றவர்கள்  கொலையுண்ட முறை தொடர்பான சில ஆய்வுகள் நான்காம் பிரிவிலும், சில பொது முடிவுகள் இறுதிப்பிரிவான ஐந்தாம் பிரிவிலும் தரப்பட்டுள்ளன. 30 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் சீதா ரஞ்சனி சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  222720). 

ஏனைய பதிவுகள்

‎‎local casino Globe Harbors and Rewards To your Software Store/h1> <

The brand new Jesus Poseidon

Posts No matter what Climate Q: What is the Legacy Of your God Of Storms? Huracan The brand new Jesus Away from Violent storm And

11151 திருச்செந்தூர்.

இரத்தினம் நித்தியானந்தன். லண்டன்: இரத்தினம் நித்தியானந்தன், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மலேசியத் திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் மூன்றாவது அனைத்துலக