9036 ஆன்மீக வாழ்க்கைக்கு 101 பயனுள்ள வழிகாட்டிகள்.

விசுவலிங்கம் செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வி விஜயதெய்வேந்திரன் திருவருள்சோதி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, 2009. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிறின்றேர்ஸ்).

52 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.

பர்மா நாட்டில் புகையிரத நிலைய அதிபராக இருந்த தம்பர் விசுவலிங்கம் அவர்களின் மகனான அருள்நெறிச் செல்வர் வி.செல்வரத்தினம் தன் பெற்றோருக்கு சமர்ப்பணமாக்கிய ஆன்மீக நூல் இது. அளவெட்டியைச் சேர்ந்த இந் நூலாசிரியர் விஞ்ஞான, கணித பாடநூல்கள் பலவற்றின் ஆசிரியருமாவார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204320).

ஏனைய பதிவுகள்