9041 மலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும்.        

வின்சென்ற் பற்றிக். (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, அமலமரித் தியாகிகள் சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1985. (அச்சக விபரம் தரப்படவில்லை).

82 பக்கம், விலை: ரூபா 8.00, அளவு: 20.5×14 சமீ.

உளவியல் சார்ந்த மனித மேம்பாட்டுக் கருத்துக்களைக் கொண்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். மலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும் (வி.பி), குழந்தை உருவாக்கலும் பயிற்சி முறைகளும் (எம்.எஸ்.குரூஸ்), குழந்தைப் பருவமும் வளர்ச்சிப் படிமுறைகளும் (சி.சாந்தலட்சுமி), இளமையின் இராகங்கள் (ஆர்.பி.ஜே.பாக்கியராஜா), இல்லறத்தை இனிமையாக்குங்கள் (ராஜன் மங்களா), மனம் விமர்சிக்கப்படுகிறது (ஜீவனதாஸ் பெர்னாண்டோ), மன மருத்துவ முறை (எஸ்.டேமியன்), அன்பில்லா உலகில் மனித நோவுகள் (எஸ்.டேமியன்), பழிவாங்கல் (செம்பியன் செல்வன்), பருவங்கள் மாற உருவங்கள் சந்திக்கின்றன (செபஸ்தி நீக்லஸ்), தாழ்வு மனப்பான்மை (ர.ஜெ.கொன்சன்ரைன்),  தழுவுகின்ற தோல்விகளும் தொடர்கின்ற தாழ்வு மனப்பான்மையும் (ஆர்.சுரேந்தினி), முயற்சியே முன்னேற்றத்தின் வழி (அருந்ததி மகாதேவன்), மதுவெறியின் விளைவுகளும் சிகிச்சை முறைகளும் (எஸ்.டேமியன்), குடிக்காதே தம்பி குடிக்காதே (ரூபன் மரியாம்பிள்ளை), விரக்தியும் அதன் விளைவுகளும் (ஆ.சௌந்தரலிங்கம்), குடித்தனமும் குடிப்பழக்கமும் (வின்சன்ற் பற்றிக்), தாழ்வுமனத் தூண்டல்கள் (சி.சாந்தலட்சுமி) ஆகிய 18 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87038).     

ஏனைய பதிவுகள்

A real income Ports

Posts Spectra slot rtp – Ideas on how to Play Slots On the web Making certain Fair Play: How Online slots Work Do i need

16017 வட மாகாண சஞ்சிகைகள் ஓர் அறிமுகம்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா