9063 அறநெறிப் பாமஞ்சரி.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்).யாழ்ப்பாணம்: திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்கள் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, மே 1969. (யாழ்ப்பாணம்:  ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்).

ix, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

தமிழறிஞர் சொக்கன் கருத்துரை, விளக்கவுரைகளுடன் தொகுத்தளித்துள்ள அறநெறிப்பா மஞ்சரி. சேர்.பொன் இராமநாதன் அவர்களின் ஆத்திசூடி மந்திர விளக்கம் என்ற சிறு நூலும் சேர்ந்தது.  சிறுவர்கள் கருத்தறிந்து மனனஞ்செய்வதற்கேற்ற வகையில் இப்பாமஞ்சரி உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியின் சிறப்பு, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர், மானவீரம், நல்லாரைப் பொறுத்ததே நானிலம், யாதும் ஊரே யாவருங் கேளிர், உழவும் வாணிகமும், மாட்சிபெறு மன்னன், முனிபுங்கவர்களின் தவநிலை மாண்பு, நன்மக்களைப் பெற்றோரை நாடுஞ்சிறப்பு, நயனில் மாக்கள், பெற்றோர்க்குப் பெண்களில் ஏதுரிமை, மண்ணாசை அழிவிற்கே வித்து, இளங்கோவடிகளின் இன்னுரை, சாத்தன் வகுத்துரைத்த நல்லறம், வள்ளுவன் வாய்மொழி, சமண முணிவர்களின் சால்புரை, இனியவை எவை, கணிமேதையாரின் அணியுரை, கொன்றை வேந்தன், வாக்குண்டாம்,  நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி போன்ற 35 இன்னோரன்ன தலைப்புகளின்கீழ் இவை தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135032).

ஏனைய பதிவுகள்

Stephanie D’Hose Wikipedia

Blogs Video poker You will come across a good seal of approval from TST, which is an international respected Certified Assessment Facility. Inside the plain

12565 – தமிழ் மொழி விளக்கம் இரண்டு பகுதிகள் அடங்கியது.

க.கயிலாயநாதன். வட்டுக்கோட்டை: க.கயிலாயநாதன், உதவி அதிபர், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, சித்தன்கேணி, 3வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, பங்குனி 1953, 2வது திருத்திய பதிப்பு, 1954. (யாழ்ப்பாணம்: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).

11166 ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம்: சிறப்புமலர் 1978.

பி.கிருஷ்ணசாமி (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம், 4. சம்னர் பிளேஸ், 1வது பதிப்பு. 1978. (கொழும்பு 12:  சீ.என்.பீ. அச்சகம்). 130 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சற்குரு

‎‎real money Local casino Betting To the App Shop/h1>