9073 இந்து நாகரிகத்திற் கலை.

காரை செ.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்).

xviii, 228 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் இந்தியப் பெருங்கண்டத்தில் சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து வளர்ச்சிபெற்று வந்த கலைகள் பற்றி ஆராய்கிறது. சமயஞ்சாராத கலைகள் பற்றி ஓரளவு சொல்லப்பட்டபோதும், இந்து நாகரிகத்துடன் தொடர்புடைய சமயஞ் சார்ந்த கலைகள் பற்றியே ஆழமாக விபரிக்கப்பட்டுள்ளது. தோற்றுவாய், சிந்துவெளி நாகரிகம், மௌரியருக்கு முற்பட்ட கலை, மௌரியர் கலை, இந்தியக் கலை (கி.மு.200-கி.பி.300 வரை), குப்தர் காலக் கலை, முற்காலச் சாளுக்கியர் கலை, எல்லோரா எலிபந்தா குகைகள், சோளங்கிக் கலை, ஹொய்சளர் பாணி, தமிழகக் கலைகள் (சங்ககாலம், சங்கம் மருவிய காலம்), பல்லவர் காலம், அதியமான் கோயில்கள், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜயநகரர் காலம், நாயக்கர் காலம், உலோகத் திருமேனிகள், ஓவியங்கள், இசைக்கலை, நடனக் கலை, நாடகக் கலை, தமிழகமும் நாடகமும், நிறைவுரை ஆகிய 24 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104856).

ஏனைய பதிவுகள்

Freispiele Ohne Einzahlung Juni 2024

Content Euro Casino Bonus Ohne Einzahlung | book of rebirth reloaded Slot Free Spins So Erhalten Sie 100 Freispiele Ohne Einzahlung Bei Registrierung Lass Stecken