9082 இந்து நாகரீகம்: சுருக்க வினாவிடை: க.பொ.த. உயர்தர வகுப்புக்குரியது.

 சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2003. (யாழ்ப்பாணம்: கலையகம் கம்பியூட்டர் சேவையும் ஸ்கிரீன் பிரின்டிங் சேவையும், சுண்டிக்குளி).

(3), 200 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.

இணுவில் மத்திய கல்லூரியினதும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினதும் பழைய மாணவரான இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைமாணி, கல்விப்பின் டிப்ளோமா பட்டங்கள் பெற்றவர். ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர், கடந்த காலங்களில் தாம் கற்றதனூடாகவும், கற்பித்தலினூடாகவும் , விடைத்தாள்களை புள்ளியிடுவதினூடாகவும் இந்துநாகரீகம் என்னும் துறையில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் திரட்டி மாணவர் நலன்கருதி இந்நூலை வெளியிட்டுள்ளார். இதில் சிந்துவெளி நாகரீகம், வேதம் காட்டும் நாகரீகம், ஆகமம் காட்டும் நாகரீகம், இதிகாசங்கள் காட்டும் சமயம், புராணங்கள் சித்திரிக்கும் சமயம், தர்ம சாஸ்திரங்கள், சண்மதப் பிரிவுகள், சித்தாந்த சாஸ்திர நூல்கள், விக்கிரகவியல், நுண்கலைகள், சமய குரவர்கள் நால்வர், வடநாட்டுப் பத்திநெறி, வேதாந்தவாதிகள், சித்தாந்தக் கோட்பாடுகள் ஆகிய 14 பாடப்பரப்புகளில் இந்நூல் உள்ளடக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 191002).

ஏனைய பதிவுகள்

Juegos Sobre Tragamonedas Regalado Sobre Neón

Content Excelentes Grados Sobre Máquinas Tragamonedas De Cinco Tambores: ranura wild water Tragamonedas Regalado Desprovisto Eximir Y no ha transpirado Desprovisto Registrarse De 2024 Soluciona

9223 பக்திப் பஜனைப் பாடல்கள்.

நூல் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1958. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 68 பக்கம், விலை: சதம் 65, அளவு: 18×11.5 சமீ. சைவசமயத்தின்

10681 இற்றைத் திங்கள்.

பத்மா சோமகாந்தன் (புனைப்பெயர்: புதுமைப் பிரியை). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, ஹவ்லொக்  டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). xx, 176 பக்கம்,