சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், பூநாறி மரத்தடி, காங்கேசன்துறை வீதி).
(7), 197 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ.
இந்து நாகரீகம் புதிய பாடத்திட்டம் 1997இல் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இடம்பெற்ற பரீட்சை வினாக்களின் தன்மைகளைக் கருத்திற்கொண்டு இம்மாதிரிப் பயிற்சிகள் 14 பிரிவுகளில் தரப்பட்டுள்ளன. 1997, -98, -99, 2000 ஆம் ஆண்டுகளுக்குரிய பரீட்சை வினாத்தாள்களை இந்நூலில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 132130).
இந்து நாகரிகம்: வினா-விடை (க.பொ.த.உயர்தர வகுப்புக்குரியது).
சின்னத்துரை சோதிலிங்கம். இணுவில்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, 3வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1995, 2வது பதிப்பு, ஜனவரி 2001, (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், பூநாறி மரத்தடி, காங்கேசன்துறை வீதி).
(5), 222 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20×14.5 சமீ.
வரலாற்றுப் பின்னணி, ஈழத்து இந்து மதம் பற்றி வரலாற்றுரீதியாக ஆராய்தல், சைவசித்தாந்தம் பற்றிய கடந்தகால வினாக்கள், இந்துக் கல்வி மரபு சமுதாயத்தில் பெறும் இடத்தினை மதிப்பிடுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இணுவில் மத்திய கல்லூரியினதும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினதும் பழைய மாணவரான இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைமாணி, கல்விப்பின் டிப்ளோமா பட்டங்கள் பெற்றவர். ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர், கடந்த காலங்களில் தாம் கற்றதனூடாகவும், கற்பித்தலினூடாகவும் , விடைத்தாள்களை புள்ளியிடுவதினூடாகவும் இந்துநாகரீகம் என்னும் துறையில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் திரட்டி மாணவர் நலன்கருதி இந்நூலை வெளியிட்டுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 132126).