9107 சந்தானமணி.

செ.சபாபதி சோதிடர். யாழ்ப்பாணம்: செ.சபாபதி சோதிடர், அச்சுவேலி தெற்கு, 1வது பதிப்பு, சித்திரை 1935. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை).

(8), 103 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இது அச்சுவேலி தெற்கு செகநாத சோதிடரின் புத்திரன் சபாபதி சோதிடர் அவர்களால் பல சோதிட நூல்களிலிருந்து திரட்டி எவரும் இலகுவில் விளங்கக்கூடிய உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெண்கள் ருதுவாகுங்காலம், கருப்ப உற்பத்திகாலம், ஸ்திரீ புருஷ சங்கமம், கர்ப்பசம்பவகாலம், கர்ப்போற்பத்திமுதற் செனனமளவுமுண்டாகுமங்கம், ஆண் பெண் கிரகநிலை, கர்ப்பச் சிதைவு, கர்ப்பமுதல்மாதாதிபதி, இரண்டு மூன்றாம் மாதாதிபதி, நாலைந்தாறாம் மாதாதிபதி, ஏழாம் மாதாதிபதி, எட்டாம் மாதாதிபதி, ஒன்பதாம் பத்தாம்மாதாதிபதி, கர்ப்பாரிட்டமும் சுகமும், பிரசவகாலம், மாதாப்பிணி, பிதாப்பிணி, அரிட்டங்கள், சுகப்பிரசவம், ஆண்பெண், ஆண் உற்பவம், பெண் உற்பவம், இரட்டைச் சென்மம், பெண்சென்மம், ஆண்சென்மம், அலிசென்மம், புத்திரதோஷம், முகூர்த்த சுபாசுபவிளக்கம், வர்ஷசுபாசுபம், முக்குணவேளை, நவகுணவேளை, திதிவிளக்கம், யோகநாமங்கள், கரணசுபாசுபம், நட்சத்திரசுபாசுபம், நாசயோகம், கிழமைபிறந்த நட்சத்திரம், மாததினம், கர்ப்பாதானத்துக்கு நாள், அச்சுவினி முதல் ஜனனநாளின் சுபாசுப நட்சத்திரங்கள், தம்பதிகளுக்கன்யோன்யமான நட்சத்திரங்கள், கர்ப்பாதானத்துக்கு அத்தியாவசியகம் நீக்கவேண்டியன, நிஷேகலக்கினமாதியன, கர்ப்பாதானசுபராசிகள், சுபமுகூர்த்தகிரகநிலை, புட்கரபாதம், மிருத்துமுகூர்த்தம், கர்ப்பம் நிறைந்து பிறத்தல் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  135016). 

ஏனைய பதிவுகள்

Roulette Gaming Approach Informed me

Posts Proceed the site – Additional Tips To assist you Earn Inside the Blackjack Locating the Primary Gaming Approach Really worth Gambling Steps Best Mlb

Gambling Slang Told me

Articles Just how do Bonus Wagers Work?: Sportsbook Incentives Told me: motogp live American Chance Favorites “Jacks otherwise Finest” is actually a motogp live popular