9108 சோதிட வாசகம்: இரண்டாம் புத்தகம்.

த.கணபதிப்பிள்ளை, மு.சின்னப்பு. யாழ்ப்பாணம்: த.கணபதிப்பிள்ளை, மு.சின்னப்பு, அளவெட்டி, 1வது பதிப்பு, சித்திரை 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

vii, 67 பக்கம், தகடு, விலை: ரூபா 2.25., அளவு: 21.5×14 சமீ.

ஒரு பிள்ளை பிறந்த நேரத்தைக்கொண்டு இராசிநிலை, நவாம்சநிலை, செனனகால தசாபத்தி இருப்பு ஆகியனவற்றைக் கொண்ட சாதகக் குறிப்பொன்றினைக் கணிக்கும் முறை பற்றி இந்நூலின் முதலாம் புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டாம் புத்தகத்தில், ஒரு சாதகக் குறிப்பிற் காணப்படும் கிரகராசி நிலை, பாவநிலை ஆகியவற்றின் பலன்களையும், கிரக காரகங்களையும் ஆராய்ந்து பொதுப்பலன் காணும் முறை விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இலக்கின பாவம், தன பாவம், சகோதர பாவம், மாதுரு பாவம், புத்திர பாவம், சத்துரு பாவம், களத்திர பாவம், ஆயுட் பாவம், தன்ம பாவம், கன்ம பாவம், இலாப பாவம், விரய பாவம், ஆகிய 12 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  135002). 

ஏனைய பதிவுகள்

3d Ports Cost-free

Content 100 percent free Slot Arbitrary Matter Generator Winebottle Play Incredible Casino three dimensional Online game Now! When you’ve got that it off experiment some