9122 இறை விழுமியம்: இறையியல் கட்டுரைகள்.

அருட்பணி அ.ஸ்ரீபன்.  யாழ்ப்பாணம்: முரண்பாட்டுக் கற்கைநெறி மன்றம், இலங்கைத் திருச்சபை, 1வது பதிப்பு, ஜுன் 2008. (யாழ்ப்பாணம்: ஏ.சி.எம்.அச்சகம்).

xvi, 168 பக்கம், தகடு, விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில்  திரித்துவம் பற்றிய பன்முகப் பார்வை தொடங்கி அங்கிலிக்கன் திருச்சபை வரலாறு ஈறாக ஆசிரியரின் 29 இறையியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் திருச்சபையின் இளம் திருப்பணியாளர் அ.ஸ்ரிபன், 2010 தை முதல் இலங்கை இறையியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் நல்லூர் புனித யாக்கோபு ஆலயத்தின் பங்குத் தந்தையாக பணியாற்றிய 2004-2009 காலப்பகுதியில்பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர். 2009இல் இலங்கை இலக்கியப் பேரவையின் விருதினைப் பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 197720).

ஏனைய பதிவுகள்

13210 கந்தபுராண கலாசாரம்: பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கட்டுரைகள்.

சி.கணபதிப்பிள்ளை (மூலம்), ஸ்ரீ பிரசாந்தன், ஏ.அனுசாந்தன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,