வை.அநவரதவிநாயகமூர்த்தி. யாழ்ப்பாணம்: வை. அநவரதவிநாயகமூர்த்தி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxii, 180 பக்கம், தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 22.5×14.5 சமீ.
செந்தமிழும் சிவநெறியும் செழித்து வளரும் இணுவைமாநகர், ஆலயத்தின் தோற்றமும் அமைப்பும், மூலமூர்த்தியின் அருட்பொலிவும் மகத்துவமும், வேழமுகத்து விநாயகன், வழிபாட்டு மரபுகள், மகோற்சவத்தில் முதன்மைபெற்று விளங்கும் கொடியேற்றம், அருள்மணம் கமழும் மகோற்சவ விழாக்கள், நித்திய நைமித்திக பூசைகள், மஹா கும்பாபிஷேகம், ஆலய வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற 1008 கலசாபிஷேகம், சிவாசாரியார் பரம்பரை, பரராஜசேகர மன்னனுக்கும் ஆலயத்துக்கும் உள்ள தொடர்பு, அடியார் அல்லல் தீர்க்கும் விநாயகர் விரதங்கள், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோயிலில் விநாயக விரதங்கள் அனுஷ்டிக்கப்படும் முறைகள், பிள்ளையார் கதைப் படிப்பும் புராண படனமும், பரராஜசேகரப் பிள்ளையாருக்கு கற்கோயில் அமைக்கும் திருப்பணி, ஏனைய திருப்பணிகள், ஆலயத்தில் நடைபெறும் சரியைத் தொண்டுகள், இணுவில் ஸ்ரீ பரராஜ சேகரப் பிள்ளையார்மீது பாடப்பெற்ற அருட்பாடல்கள், அடியார்களுக்கு அருள்புரியும் வண்ணம் விநாயகப்பெருமான் எடுத்த எழில்மிகு திருக்கோலங்கள், ஆலயத்தின் உள்சுற்றுப் பிரகாரங்களை அலங்கரிக்கும் ஓவியங்கள் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூலில் கட்டுரைகள் காணப்படுகின்றன. தொடர்ந்து, பிள்ளையார் கதை, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், ஸ்ரீபரராஜசேகரப் பிள்ளையார் துதி, விநாயகர் புராணம், பஞ்சமுக விநாயகரே ஆடீரூஞ்சல் ஆகிய ஆறு பாமாலைகளும் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 150399).