9225 முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா மீதும் ஸ்ரீ முன்னைநாதர் மீதும் பாடப்பட்ட பிரபந்தங்கள்.

ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்;). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xii, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14.5 சமீ., ஐளுடீN: 978-955-0877-05-8.

பக்தி மேலீட்டால் முன்னைநாதப் பெருமான் மீதும் ஸ்ரீவடிவாம்பிகை அம்பாள் மீதும் பல்வேறு பாவலர்களால் பாடப்பெற்று, காலத்திற்குக்காலம் சிறு பிரசுரங்களாகப் பதிப்பிக்கப்பெற்றுவந்த பாடல்களைத் தொகுத்து வெளியிடும் நடவடிக்கையில் மற்றுமொரு முயற்சி இதுவாகும்.  முன்னேச்சரப் பிரபந்தத் திரட்டு என்ற பெருநூலுக்கான முன்னோடி நடவடிக்கையாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளரும், மேற்படி முன்னேஸ்வர தேவஸ்தான பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் அவர்கள் இச்சிறுநூலைப் பதிப்பித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

15990 மீன்பாடுந் தேனாட்டுச் செல்வங்கள்: முதலாவது தொகுதி.

க.ஞானரெத்தினம், க.தா.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்கள்), நிழல்எட்வேர்ட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2003. (கனடா: றீ கொப்பி, தொரன்ரோ).