9265 பாரதியின் பெண் விடுதலை: இலக்கியம்-கருத்து-காலம்.

சித்திரலேகா மௌனகுரு. மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7, ஞானசூரியம் சதுக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 1996. (தெகிவளை: டெக்னோ பிரின்ட், 83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவிலை).

(6), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

தென்னாசியாவில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலை பற்றியும் அதில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றியும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அக்கறை காட்டிய எழுத்தாளர்களில் சுப்பிரமணிய பாரதியார் மிக முக்கியமானவர். பெண்ணுடைய வாழ்க்கை, அவளது அந்தஸ்து நிலை, அவள் பற்றிய சமூகநோக்கு ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படவேண்டும் என பாரதியார் மிகவும் வற்புறுத்தி வந்தார். பாரதியின் சமகாலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலும் நடந்தேறிய நிகழ்வுகள் பாரதியின் இக்கருத்துக்களுக்கு வலுவூட்டுவனவாக அமைந்துள்ளன. அவற்றைக் கோடிட்டுக்காட்டுவதும் தமிழ்ச் சூழலில் பாரதியை அவரது சமகாலத்தவருடன் ஒப்பிடுவதன்மூலம் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் இச்சிறுநூலின் நோக்கமாகும். இவ்வகையில்  நூலாசிரியர் எழுதிய பாரதியின் பெண் விடுதலை: காலமும் கருத்தும், பாரதியும் பெண் விடுதலையும், சுப்பிரமணிய பாரதியும் பெண் விடுதலைக்கு உழைத்த சீனத்து ஜியுஜினும், துரையப்பாபிள்ளையும் பாரதியாரும்: சமகாலக் கருத்தோட்டங்களில் ஒற்றுமையும் முரண்பாடும் ஆகிய நான்கு விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சித்திரலேகா மௌனகுரு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையின் பேராசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

คาสิโนออนไลน์ที่ดีที่สุด โบนัสและโปรโมชั่นที่ดีกว่า มกราคม 2025

บล็อก โบนัสคาสิโนออนไลน์ที่ดีที่สุดคืออะไร เหมือนเกม คู่มือคาสิโนปัจจุบัน หมายเหตุคาสิโน BetMGM ชื่อเสียงที่ได้รับแรงบันดาลใจจากตะวันตกซึ่งมีความผันผวนทั่วไปถึงสูง และคุณจะได้รับรางวัลจำกัดจำนวน 6,750 เท่า โดยพื้นฐานแล้ว ความจริงแล้วไม่มีการหมุนฟรี 100 เปอร์เซ็นต์ ไม่ต้องฝากเงิน ไม่มีตัวเลือก และโดยปกติแล้ว คุณจะต้องวางเดิมพันขั้นต่ำ 10 ปอนด์ การโอนเงินอย่างน้อย 30 วันจะช่วยให้คุณรักษาชื่อเสียงของระบบของคุณไว้ได้ โอปอลคือความสูงฟุต และผู้เข้าร่วมจะเริ่มเมื่อลงทะเบียนบัญชีจาก