9321 கிராமியம்-கல்வி-மேம்பாடு: சமூகவியல் பார்வைகள்.

இ.இராஜேஸ்கண்ணன். உடுப்பிட்டி: சாத்வீக சுருதி, இமையாணன் கிழக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு).

(5), 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4900-00-4.

கிராமிய வாழ்வின் அசைவியக்கத்தின் ஆதாரவிசையான கல்வி, இதிலுள்ள 10 கட்டுரைகளினதும் மையப்பொருளாகவுள்ளது. கிராமியச் சமூகவியல், கல்வியின் சமூகவியல் ஆகியவற்றினைத் தன் ஆய்வார்வத்துறையாக வரித்துக்கொண்ட இராஜேஸ்கண்ணனின் தெளிந்த பார்வையும் பகுப்பாய்வுத்திறனும் இக்கட்டுரைகளில் முழுமையாகப் பளிச்சிடக்காணலாம். இந்நூலில் கல்வியும் கிராமிய மேம்பாடும்: ஒரு கல்வியின் சமூகவியல் தரிசனம், உட்படுத்தல் கல்வி: மனப்பாங்கு மாற்றமும் சவால்களும், ஆசிரிய முன்மாதிரிகளும் தலைமைத்துவமும், இளையோர் பண்பாடும் சமூக விலகலும்: நிகழ் போக்குகளும் மாற்றத்திற்கான உபாயங்களும், கிராமிய வாழ்வின் பண்பாட்டுச் சூழல்: நிலைபேறும் மாற்றமும், யாழ்ப்பாணத்துக் கிராமிய கூட்டுவாழ்வும் மாறுதல்களும், போரின் பிந்திய கிராமிய மேம்பாட்டில் சனசமூக நிலையங்கள், பேண்தகு மேம்பாட்டில் சமூக வலுவூட்டலின் வகிபாகம், உலகமயமாக்கமும் மேம்பாடும், முரண்பாடு: முகாமையும் உருமாற்றமும் ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது எழுதப்பட்ட 10 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236664).

ஏனைய பதிவுகள்

13A22 – பிரதேச வரலாற்று மூலங்கள்: ஒரு நூல்வழித் தேடல்: தீவகம்.

என்.செல்வராஜா. லண்டன்: யாழ்.தீவக ஒன்றியம், பிரித்தானியா, 2வது பதிப்பு, மே 2018, 1வது ஜேர்மன் பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). v, 129 பக்கம்,

Internet casino Register Extra

Posts Exploring Other Lowest Lowest Put Gambling enterprise Possibilities – slot dolphins luck 2 Begin by ten Fool around with 100percent Earliest Deposit Incentive Slot