9326 புதிய கலைத்திட்ட நோக்கும் பாடசாலைக் கல்வியில் எதிர்பார்க்கப்படும் மாற்றமும்.

இந்திரா லிலாமணி கினிகே (ஆங்கில மூலம்), எம்.எச்.எம்.யாக்கூத் (தமிழாக்கம்). பாதுக்கை: கல்வி வாண்மைத் தேர்ச்சி விருத்தி மையம், மீப்பே சந்தி, 1வது பதிப்பு, மார்ச் 2008. (நுகேகொடை: வரையறுக்கப்பட்ட தீபானி அச்சு/வெளியீட்டு (தனியார்) கம்பெனி, 464, ஹைலெவல் வீதி, கங்கொடவில).

vi, 136 பக்கம், விலை: ரூபா 290., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1853-03-7.

சிறந்த பொதுக்கல்வி என்பது யாது, புதிய சகத்திரத்திற்கு புதியதொரு கலைத்திட்ட நோக்கு, புதிய சகத்திரத்தில் பாடசாலையை நாடிவரும் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கலைத்திட்டம், புதிய சகத்திரத்தின் முதலாவது இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்ட மறுசீரமைப்பு -கனிட்ட இடைநிலை, புதிய சகத்திரத்தின் முதலாவது இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்ட மறுசீரமைப்பு -சிரேஷ்ட இடைநிலை, பாடசாலையின் சிறப்பான ஒரு பணி-சிந்தனைத்திறன் விருத்தி, சமூகத்திறன் விருத்தி, சுயதிறன் விருத்தி, புதிய சகத்திரத்தில் களமிறங்கும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகள், ஆசிரியர் வகிபாகத்தின் விரிகை, நிலைமாற்ற ஆசிரியர் வகிபாகம், கற்றல்-கற்பித்தலை விரிவுபடுத்தும் கருவிகள், தேசிய கல்வி நிறுவக கலைத்திட்ட அபிவிருத்திப் பணி, புதிய சகத்திரத்தின் கலைத்திட்ட மறுசீரமைப்பின் வெற்றிக்காக கலைத்திட்டத் தலைவர்களை விருத்தி செய்தல், கலைத்திட்ட மறுசீரமைப்புகளின் வெற்றிக்காக மாற்றமடையவேண்டிய பரீட்சை முறை ஆகிய 15 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புதிய சகத்திரத்தின் முதலாவது கலைத்திட்ட மறுசீரமைப்பு-2007ம் ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் தேசிய கல்வி நிறுவக விஞ்ஞான, தொழில்நுட்பபீட, கலைத்திட்ட அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளர் நாயகமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234189).

ஏனைய பதிவுகள்

Enjoy Free Gambling games

Blogs How to Start with Real cash Black-jack? More Higher Black-jack Incentives Välj Struck Eller Remain Take your blackjack casinos to you no matter where,