9366 இலக்கண வரம்பு: மகாவித்துவான் சி.கணேசையர் அவர்களின் இலக்கணக் கட்டுரைகள்.

ஸ்ரீ பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

viii, 219 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-9233-26-8.

வித்துவசிரோன்மணி சி.கணேசையர் (1.4.1878-8.11.1958) இலங்கையின் யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் பிறந்தவர். சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவiகையிலும், குறிப்பாக தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கு விளக்கக் குறிப்பு எழுதியவர் என்ற வகையிலும் ஈழத்தின் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளின் இலக்கிய வளர்ச்சியில்  இவர் பங்களிப்பு  இலங்கையிலும் தமிழகத்திலும் விதந்துபோற்றப்படுகின்றது. இவர் மதுரைத் தமிழச்சங்க வெளியீடான செந்தமிழ் மற்றும் பிற வெளியீடுகளான ஈழகேசரி, வித்தகம், செந்தமிழ்ச் செல்வி, கலாவல்லி ஆகிய பத்திரிகைகளில்  பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் செந்தமிழ், ஈழகேசரி ஆகியவற்றில் இவர் எழுதிய இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருபது இந்நூலில் இடம்பெறுகின்றன. தொனி, வடசொல், யாப்பருங்கலக் காரிகை யுரைத்திருத்தம், வடமொழி முதுமொழியன்றோ? போலி எழுத்து, ஆறனுருபு பிறிதுருபேற்றல், தொகைநிலை, சிறுபொழுது, அளபெடை, பிறிதுபிறிதேற்றல், தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும், சிறுபொழுதாராய்ச்சி, சேனாவரையருரைப் பதிப்பும் பிழை திருத்தமும், தொல்காப்பியத்தின் றொன்மை, இயற்கைநவிற்சியும் செயற்கைப் புனைவும், மெய்ப்பாடு, செந்தமிழ், இலக்கண வரம்பு, தொல் பொருள் உவமவியல்: சில விளக்கவுரைக் குறிப்புகள் ஆகிய இருபது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக, கணேசையர் தன் ஐயங்கள் சிலவற்றை வெளிப்படுத்திய சில ஆராய்ச்சி என்ற தலைப்பிலான குறிப்புக்கள் இரண்டும், இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pub Elephant Their A victory

Articles Go back to Player (RTP) | casino Tiger Gaming casino no deposit bonus Wonclub Apps The brand new Online casinos playing the real deal