9464 சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கைநூல்.

பொன்னம்பலம் இராமநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஐப்பசி 1987. (யாழ்ப்பாணம்;: ஸ்ரீகாந்தா அச்சகம்).

ix, 36 பக்கம், தகடு, விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி பொ.இராமநாதன், யாழ்.மாநகரசபையின் சித்த மருத்துவ நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரியாவார். லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ள இந்நூலில் முதற் பகுதியில் வைத்திய சாஸ்திரங்களில் குறிப்பிடப்படும் செய்கைகளும் (யுஉவழைளெ) அவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்பதங்களும், வைத்தியர்களால் உபயோகிக்கப்படும் சில குறியீடுகள் ஆகிய இரு அத்தியாயங்களும் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் பிரதான மருந்துவகைகள் சில விபரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசவ அரிஷ்டங்கள், தைலங்கள், குவாதங்கள், குளிகைகள், சூரணங்கள், பஸ்பங்கள், கல்கங்களும் லேகியங்களும் இரசம் சேர்ந்த மருந்துகள் ஆகிய எட்டு விடயங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. மூனறாம் பகுதியில் ஆயுர்வேத முறையில் உள்ள சில கஷாயங்கள், சில குறிப்பிடத்தக்க செய்கைகளுக்குரிய மூலிகைகள், மருத்துவ அளவைகள், விடமுறிவுக்கு நம்நாட்டு மருத்துவம் ஆகிய விடயங்கள் தரப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104892).                                   

ஏனைய பதிவுகள்

Best E Ink Pill

Articles A real income Compared to Enjoyment Different kinds of Ports On line Free Buffalo Ports No Install Check out your website of one’s internet