9502 கணக்கியல் கோட்பாடுகளும் நியமங்களும்.

 இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: இ.இரத்தினம், விரிவுரையாளர், 12/1, ரயில்வே வடக்கு வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: நியு ஈரா அச்சகம்).

(4), 99 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 21×14.5 சமீ.

இலங்கை கணக்கீட்டு நியமம், கணக்கியல் எண்ணக்கரு, கணக்கியல் அடிப்படைகள், கணக்கேடுகள், மூல ஆவணங்கள், பேரேடுகள், பரீட்சைமீதி, முடிவுக் கணக்குகள், கணக்கியல் சமன்பாடு, உற்பத்திக் கணக்கு, ஐயக் கடன் ஏற்பாடு, மீளப்பெற்ற அறவிடமுடியாக்கடன், பெறுமானத் தேய்வு, நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள், பொறுப்புகள், செலவினங்கள், வருமானங்கள், கணக்கியல் தொடர்பாகக் காசுமுறையும் அட்டுறு முறையும், வியாபாரக் கழிவும் காசுக்கழிவும், தகவல் பெறும் ஒரு மூலமாகக் கணக்கியல், கணக்கியல் சூழல், கணக்கியல் உள்ளீடுகளும் வெளியீடுகளும், கணக்கீட்டுச் செய்முறையைப் பாதிக்கும் காரணிகள், இலங்கை கணக்கீட்டு நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் பிரதான உந்துசக்திகள், நிதிக் கூற்றுக்கள், பங்குடமை, வரையறுத்த கம்பெனி, கூட்டு முயற்சி, ஒப்படை வியாபாரம், மாற்றுண்டியல், கட்டுப்பாட்டுக் கணக்கு, கிளைகள் கணக்கு, வருமானங்களினதும் செலவீடுகளினதும் விபரங்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் இலாபநட்டம் காணும் முறை ஆகிய விரிவான தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத் துறையின் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103016).     

ஏனைய பதிவுகள்

Speel Rando Runne Met Noppes Spins

Inhoud Random Bonus Winner Va Een Klassieker Speelautomaat Totda Zeker Internet Verwardheid Valsspelen Betreffende U Rando Runne Random Runner Inkomsten Bank Astro Fruit casino Toneelspelers

15177 இலங்கையின் அதிகாரப் பகிர்வு யோசனைகள்: கருத்துரைகளும் கண்ணோட்டங்களும்.

ரா.நித்தியானந்தன் (தொகுப்பாசிரியர்). கண்டி: பீ.சிவசுப்பிரமணியம், H.I.E. உயர் கல்வி நிறுவனம், 239, திருக்கோணமலை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (கண்டி: லதா இம்பிரெஸ், 302, டீ.எஸ்.சேனாநாயக்க வீதி). ஒை, 108 பக்கம், விலை: