9503 கணக்கீடு பகுதி 1.

நாகலிங்கம் யோகராசா. கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92. மனிங் பிளேஸ், 3வது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, 2003, 2வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

271 பக்கம், விலை: ரூபா 196., அளவு: 21×14 சமீ.

கணக்கீடும் கணக்கீட்டுச் சூழலும், கணக்கீட்டின் மூலங்கள் (கணக்கீட்டுச் சமன்பாடு), இரட்டைப்பதிவுக்கான அறிமுகம் (இரட்டைப்பதிவு, பேரேடு), கணக்கீட்டு உள்ளீடுகளைப் பதிதல் (காசேடு, சில்லறைக்காசேடு, நாளேடுகள், நாட்குறிப்பேடுகள்), பரீட்சை மீதியும் வழுக்களும் (வெளிக்காட்டா வழுக்கள், வெளிக்காட்டும் வழுக்கள், வழுக்களும் கட்டுப்பாட்டுக் கணக்கும், வழுக்களும் இலாபநட்டக் கணக்கும், ஒப்படை வினாக்கள்), வங்கிக் கணக்கிணக்கக் கூற்று, கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய விடயத் தலைப்புகளில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  166144). 

ஏனைய பதிவுகள்

15629 இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்.

 கோ.நடேசையர்(மூலம்), அந்தனி ஜீவா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1937. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது