9609 தமிழ்த் தென்றல்: யாதுமூரானின் கவிதைகள்: கவிதைத் தொகுதி 1.

யாதுமூரான் (இயற்பெயர்: வே.நவமோகன்). யாழ்ப்பாணம்: பொற்கமலதேவி பதிப்பகம், திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235. காங்கேசன்துறை வீதி).

28 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 20.5×13.5 சமீ.

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் அணிந்துரையுடன் கூடிய இக்கவிதைத் தொகுதியில், தங்கத் தமிழினம் தலைநிமிர்ந்திடும், இனியவளே என் இதயமே, மூத்தவூர் மங்கைக்கோர் வாழ்த்து, சின்னவள் சிரிக்கிறாள், பொழுதொன்று புலர்கிறது, எம் அம்மா, கன்னியின் உள்ளம் கண்ணனுக்கே, (n)நஞ்சையே கண்டுகொண்டேன், புரட்சி மகனே எழுச்சி கொள்ளடா, உன் அழகை விமர்சிக்க…, உலகத் தமிழ் அகதிகள், நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல், மணிக்கவிகள், கடலான ஓர் காதல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86811).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

9285 இளைஞரும் அபிவிருத்தியும்: கருத்தரங்க அறிக்கை.

இலங்கை மன்றக் கல்லூரி. கொழும்பு 7: இலங்கை மன்றக் கல்லூரி, 100, சுதந்திரச் சதுக்கம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு  2: அகிலம் வெளியீடு, வற் அச்சகம்). (8), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,