9703 மண்ணின் கனவுகள்.

து.வைத்திலிங்கம்.  யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், இணை வெளியீடு, கொக்குவில்; கல்யாணி பிரசுரம், கலைச்சோலை, செம்பியன் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொக்குவில்: அபிராமி அச்சகம், செம்பியன் ஒழுங்கை).

(7), 180 பக்கம், விலை: ரூபா 55., அளவு: 21×14 சமீ.

ஈழத்து முன்னோடி சிறுகதைப் படைப்பாளிகளுள் ஒருவரான துரையப்பா வைத்திலிங்கம்  (து.வை) எழுதிய 19 சிறுகதைகளின் தொகுப்பு. 1939இல் பிறந்த இவர்அரச நிர்வாக சேவையில் உயர்பதவி வகுத்த சிறிய எண்ணிக்கையான தமிழர்களுள் ஒருவர். யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணம், கலட்டியில் பிறந்த இவர், தாவடி-கொக்குவிலை புகுந்த மண்ணாகக் கொண்டவர். இத்தொகுப்பில் சுட்டிப்பிள்ளையார் (வீரகேசரி 1976), முறைப்பெண்(சுதந்திரன் 1970), கனவுகள் கலைகின்றன (வீரகேசரி 1977), சலனம் (வீரகேசரி 1977), மௌனம் (வீரகேசரி 1977), கிணறு (ஈழநாடு 1985), இன்றொரு நாள் போதுமா (ஈழநாடு 1986), முற்பகலும் பிற்பகலும் (1984), தீர்ப்பு (வீரகேசரி  1982), ஒருகாகிதப்பூ கருக்கட்டுகிறது (வீரகேசரி 1980), நியாயங்கள் (சிரித்திரன்), நிதர்சனங்கள் (உதயன் 1986), எங்கே போகின்றோம், பிரபல்யம், ஆலடி வயிரவர், உறவுகளும் எல்லைக் கோடுகளும், கண்ணாடிக்கு எத்தனை முகங்கள், தூரத்து நட்சத்திரங்கள், எதிரொலி  ஆகிய தலைப்புகளில்  இதிலுள்ள சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 120846).

ஏனைய பதிவுகள்

13842 சுரோடிங்கரின் பூனை (கட்டுரைத் தொகுதி).

இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (நெல்லியடி: பரணீ அச்சகம்). viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: