மு.கந்தையா. யாழ்ப்பாணம்: கீரிமலைக் குழந்தைவேற் சுவாமிகள் சமாதித் தர்மபரிபாலன சபை, 1வது பதிப்பு, ஆனி 1965. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 137+77 பக்கம், தகடுகள், விலை: ரூபா 3.00, அளவு: 21.5×13.5 சமீ.
பிரதான விடயதானம் முதற் பிரிவிலும் அத்துவித முத்திநெறி இரண்டாம் பிரிவிலுமாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணிந்துரை, முகவுரை, குருநெறி, யாழ்ப்பாணமும் குருவிலட்சியமும், கடையிற் சுவாமிகள், மண்டைதீவிற் கடையிற் சுவாமிகள், பரமகுரு சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகள், குழந்தைவேற் சுவாமிகளின் சமாதி, குழந்தைவேற் சுவாமிகளின் பாடல்கள், அருளம்பல சுவாமிகள், அருளம்பல சுவாமிகளின் வசனமும் பாடல்களும், சமுதாயத்திற் குருபரம்பரையின் செல்வாக்கு, ஆளவந்த அண்ணல் ஆகிய அத்தியாயங்கள் காணப்படுகின்றன. அத்துவித முத்திநெறி என்ற இரண்டாம் பிரிவில் சீடாசாரம், வசனம், ஏதுசொரூபங் காரியமவதிபல லட்ஷணம், அஷ்டப் பிரமாணத்தின் திஷ்டாந்த தாஷ்டாந்த உரை, சீவன் முத்தரியல்பு, ஸ்ரீ பரமகுருசுவாமிகள் பேரில் சிஷ்யர்கள் சொல்லிய குருதோத்திரம், ஸ்ரீ கடையிற் சுவாமிகள் பேரில் சிஷ்யர்கள் சொல்லிய குருதோத்திரம், கடையிற் சுவாமிகள் குருபூசைத்தினத்தன்று மண்டைதீவு அன்பர்களால் வழக்கமாகப் படிக்கப்பட்டுவரும் பாடல்களிற் சில, ஆரம்பம் கரணசுத்தி, பரமகுருசுவாமி (சேர்.பொன். அருணாசலம் வெளியிட்டவை), குருவணக்கம், அகராதிச் சரணமாலை, இழந்த மணிகளில் எஞ்சியதொன்று, ஸ்ரீ அருளம்பல சுவாமிகள் பேரில் வைத்திலிங்கமவர்களின் பாடல் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80712).