9887 தமிழரசுத் தந்தை.

குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் (தொகுப்பாசிரியர்). கண்டி: எஸ்.எம்.ஜவுபர், எம்.ஏ.சுல்த்தான், 74/2, பிறவுண்றிக் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1960. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194 ஏ, தட்டா தெரு).

82 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.

தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வா அவர்களின் வாழ்வியல் பணிகள் பற்றிய செய்திகளையும், அவ்வப்போது அவர் உதிர்த்த முக்கிய கருத்துக்களையும் திரட்டி இருபத்தைந்து லட்சம் மக்கள் தலைவர் என்ற நூலை 1959இல் வெளியிட்டிருந்த  குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களின் பணியின் தொடர்ச்சியாக இந்நூல் தந்தை செல்வா என்றழைக்கப்படும் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்கள் பற்றிய மேலும் சில குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37984).

ஏனைய பதிவுகள்

14834 உரைநடைச் சிலம்பு (பரல்-க).

தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, வைகாசி 1949, 1வது பதிப்பு, மார்கழி 1940, 2வது பதிப்பு, தை 1942. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 118 பக்கம், விலை: