9886 தமிழ் அமிர்தம்: முதற் பாகம்.

தமிழ் மகன் கருணாநிதி (ஆசிரியர்), இ.பேரின்பநாயகம் (சிறப்பாசிரியர்), மு.பாஸ்கரன் (துணை ஆசிரியர்). சுன்னாகம்: வி.தர்மலிங்கம், தமிழர் கூட்டணி இணைச் செயலாளர், அறிவாலயம், கந்தரோடை, 1வது பதிப்பு, டிசம்பர் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(16), 74 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 21.5×14 சமீ.

ஈழத்தின் பிரபல அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான நாவலர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் வரலாற்றை இந்நூல் பதிவுசெய்கின்றது. ஆற்றல் அரசு, பண்ணாகம் தந்த பண்புடை அண்ணா, அப்பாவின் பிள்ளை, பல்கலைக்கழகத்தில் பைந்தமிழ்த் தொண்டு, தந்தையைச் சந்தித்தார், இந்தி அரக்கி எதிர்ப்பும் இளைஞர் அமிரும், பட்டம் பெற்றார் சட்டம் படித்தார், தனிப்பெருந் தலைவருடன் வாதிட்ட தமிழ் இளவல், மாவிட்டபுரத்தில் மறத்தமிழர் கூட்டம், கற்களை வென்றன சொற்கள், காங்கிரஸ் பிளந்தது கட்சி பிறந்தது, தியாகிகளின் திருக்கூட்டம், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, சிங்கத்துக்கு எதிராகச் சங்கநாதம், மரணம் கொடுத்த மனக்கலக்கம், முன்னணியில் முதல் தலைவர், அரிசி விலையும் அரசியல் நிலையும், வீட்டுக்கு வந்த வீராங்கனை, காதலா கடமையா, ஐம்பத்தாறில் அமோக வெற்றி, செந்தமிழ் மொழி காக்கச் சிந்தினார் செந்நீர், திருமலையில் எரிமலை, இறங்கி வந்தார் இலங்கைப் பிரதமர், குறுநில மன்னரா சோழர் வழித்தோன்றலா?, பண்பு குலைந்தது பதவி நிலைத்தது, சிறீயை அழித்தார் சிறையை அணைத்தார், வவுனியா மகாநாடும் வகுப்புக் கலவரமும், கடலைக் கடந்த கடமையாளன், அநீதி கண்டார் ஆவேசம் கொண்டார் என்றவாறாக அ.அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுபூர்வமாக இந்நூல் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37987).

ஏனைய பதிவுகள்

Gratis Slots Parti Online

Content Gratis Casinospel Gällande Livecasinon Prova Patiens Online Ultimata Gratis Online Multiplayer Spelhög Samt Resthög Därborta tittar du hurda du enklast belönas tillsamman free spins