9940 நம் முன்னோரளித்த அருஞ்செல்வம் 3: இலங்கைச் சரித்திரம்: 1796ம் ஆண்டு துவக்கம் இக்காலம் வரை.

ஜீ.சீ.மெண்டிஸ் (ஆங்கில மூலம்), நவாலியூர் சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, 1945. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை).

iii, 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரான காலகட்டத்து இலங்கை வரலாறு இந்நூலில் மூன்று பிரிவுகளின்கீழ் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி ஸ்தாபிக்கப்படல் 1796-1837 என்ற முதற்பிரிவில் உள்ள நான்கு அத்தியாயங்களில், பிரிட்டிஷார் வந்த காலத்தில் இலங்கையின் நிலைமை (கண்டி ராச்சியத்தின் அரசாங்க நிலை, டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கம், கிராம வாழ்க்கை), கண்டி ராச்சியத்தின் வீழ்ச்சி (கண்டிக்கு எதிராக நடந்த முதல் யுத்தம், கண்டியைக் கைப்பற்றுதல், கண்டிக் கலகம் 1817-1818), இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி பலப்படுதல் (கோட்டைகள், வீதிகள், பிரதானிகளும் சிவில் சேர்விசும், புத்த சமயம்), தற்காலத்துக்கேற்ற அரசாங்க முறை உருவாகுதல் (கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி, முடிக்குரிய குடியேற்ற நாட்டரசாங்கம் 1802-1832, கோல்புரூக் சீர்திருத்தம், நீதிமன்றச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம், இராசகாரியம் ஒழிதல்) ஆகிய விடயங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.  நாட்டின் அபிவிருத்தி என்ற இரண்டாம் பிரிவில் உள்ள மூன்று அத்தியாயங்களிலும் தோட்டங்கள் திறத்தல், நீர்ப்பாசன முறைகளைப் புனருத்தாரணஞ்செய்தல், போக்குவரத்துச் சாதனம், தோட்டங்கள் திறந்ததால் உண்டான வேறு பயன்கள் ஆகிய விடயங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சமூக அரசியல் சீர்திதருத்தங்கள் என்ற மூன்றாவது பிரிவில் தலைமைக்காரரும் குடிகளும், மத்திய வகுப்பினர், அரசியல் சீர்திருத்தம் ஆகிய மூன்று இயல்களில் விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  102484). 

ஏனைய பதிவுகள்

16177 மனிதா!.

J.S.K.A.A.H. மௌலானா. (இயற்பெயர்: ஜமாலிய்யா அஸ்ஸயித் கலீல் அவ்ன் அல்ஹாஷிமிய் மௌலானா). திருச்சி 620009: அவ்னிய்யா பதிப்பகம், மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ, யாஸீன் அறபுக் கல்லூரி வளாகம், 2வது பதிப்பு, 2016, 1வது

Best Pa Online casinos 2024

Posts Great Live Casino Added bonus What is the Minimal Deposit To experience During the A United states Online Local casino? Were there Gambling establishment