9952 இலங்கையின் பொறுப்புக்கூறல் மீது செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை.

நிபுணர் குழு. ஜெனீவா: செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு, ஐக்கிய நாடுகள் சபை, 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 10: குளோப் பிரிண்டிங் வேர்க்ஸ், இல.5, ஸ்டோர்க் பிளேஸ்).

xix, 271 பக்கம், படங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5 சமீ.

இவ்வறிக்கை 31 மார்ச் 2011இல் வெளியிடப்பட்டது. இதில் ஆணை, கட்டமைப்பு மற்றும் வேலைத்திட்டம், மோதலின் வரலாற்று மற்றும் அரசியல் பின்னணி, குற்றஞ்சாட்டப்படும் மீறல்களின் தன்மையும் அளவும், குற்றச்சாட்டுக்களின் சட்ட மதிப்பீடு, பொறுப்புக்கூறலுக்கான இலங்கையின் அணுகுமுறை, பொறுப்புக் கூறலுக்கான மேலும் தடைகள், முடிவுரைகள், பரிந்துரைகள் ஆகிய பிரிவுகளில் அறிக்கையிடப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, செயலாளர் நாயகம் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் கூட்டு அறிக்கை (மே 23, 2009), தொடர்புகள்-விளக்கக்குறிப்புகள்-தொடர்பாளர் மற்றும் தொடர்புகளின் பட்டியல், செய்மதிப் படிமங்கள்-விளக்கக்குறிப்புகள்- செய்மதிப் படிமங்களின் பட்டியல் ஆகியனவும், வன்னியிலுள்ள வைத்தியசாலைகள் பற்றிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 2008, ஜனவரி 2009 காலகட்ட யுத்த முன்னரங்குகள், யுத்தத்தின் இறுதிக்கட்டங்களிலான யுத்த சூனிய வலயங்கள், இரண்டாவது யுத்த சூனிய வலயத்தில் மார்ச் 2008இல், புதுமாத்தளன் வைத்தியசாலை அருகேயான உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புகள், ஏப்ரல் 2009இல் 2வது யுத்த சூனிய வலயத்தில் ஷெல்வீச்சால் அழிக்கப்பட்ட உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் கொட்டகை, புதுமாத்தளன் வைத்தியசாலை, இரண்டாவது யுத்த சூனிய வலயத்தில், மார்ச் 2009இல், உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட குழந்தை, பொதுமக்கள் இறப்பு, ஏப்ரல் 2009இல் சிறுவர் வைத்தியசாலை ஆகியன புகைப்படங்களாகவும், வரைபடங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 6641).

ஏனைய பதிவுகள்

Enjoy Online casino games

Posts Enjoy Inside the A browser Or Install A mobile Casino App? An educated Mobile Gambling establishment $one hundred Totally free Processor At the Mr