9953 இனப்படுகொலை: தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்.

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம். லண்டன்: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம், 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 600014: எஸ்.வி.பிரிண்ட்ஸ், எண் 47, ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெரு).

76 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×13.5 சமீ.

வரலாற்று ரீதியில் இந்தியா மீது அச்சம் கொண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத்தமிழர்களின்மீது காலம் காலமாகத் தொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதை இந்நூல் போதிய  வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த முனைகின்றது. 21ம் நூற்றாண்டின் இனப்படுகொலைக்கு  குறியீPடாக அமைந்துவிட்ட முள்ளிவாய்க்கால்  படுகொலைகள்கூட  இவ்வகையில் சிந்திக்கப்படவேண்டியதே என்று  கருதும் நூலாசிரியர், வரலாறு, இராஜதந்திரம், அரசியல் பொருளாதாரம், புவிசார் அரசியல் போன்ற அனைத்துக் கண்ணோட்டங்களையும் இணைத்து  இந்நூலை  ஒன்பது இயல்களில் அறிவியல்ரீதியாக எழுதியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மாணவனாகவும், விரிவுரையாளராகவும் இருந்த இந்நூலாசிரியர், தற்போது புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

10827 கல்: கதம்ப மாலை. பாத்திமா நஸீறா அலி (புனைபெயர்: தர்ஹாவூர் நூர்).

கல்முனை: அஸ்மா வெளியீடு, இல.164 ஊ, செய்லான் வீதி, 1வது பதிப்பு, மே 2014. (சாய்ந்தமருது: ஸயான் டிஜிட்டல் பிரின்டர்ஸ்). ix, 38 பக்கம், ஓவியங்கள்;, விலை: ரூபா 170., அளவு: 21×14.5 சமீ.,

10914 சொல்லின் செல்வர்: வாழ்வும் நினைவுகளும்: அமரர் செ.நடராஜா நினைவு மலர்.

எஸ்.எஸ்.இராஜேந்திரா (தொகுப்பாசிரியர்). கண்டி: அமரர் செ.நடராஜா நினைவு மலர் வெளியீட்டுக் குழு, 1வது பதிப்பு, ஜுன் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). (23), 283 பக்கம், புகைப்படங்கள், 19 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: