சுனில் குணசேகர (ஆங்கில மூலம்), லோரன்ஸ் துரைராஜா (தமிழாக்கம்). கொழும்பு 8: இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், 2. கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
65 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
இக்கட்டுரையானது 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பு, இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் “மாறுநிலை/உருவாக்கம்: இலங்கைத் தமிழரின் தேசியம் பற்றிய ஒரு கருத்தரங்கு” என்ற தலைப்பில் நடாத்தப்பெற்ற மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இம் மகாநாடு அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான நோர்வேயின் முகவரகத்தின் (NORAD-Norwegian Agency for Development Cooperation) நிதி உதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் இலங்கை கற்கைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு செயற்றிட்டமாகும். சிங்கள தேசியவாதம் பற்றிய சமூகவியல், அரசியல் ஆய்வுகள் அளவிலும், பண்பிலும் குறிப்பிடத்தக்களவு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் நிலையில் தமிழ் தேசியவாதம் சில காலங்களாக ஆய்வுக்குட்படாத ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய ஆய்வுகள்கூடத் தமிழ்மொழியில் மாத்திரமே காணப்படுகின்றன. எனவே இலங்கைத் தமிழரின் தேசியவாதம் பற்றிய சிக்கல்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தேவையை இந்நூல் வலியுறுத்துகின்றது.