9964 இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்.

சந்தியாபிள்ளை கீதபொன்கலன். பண்டாரவளை:  கலை இலக்கிய மன்றம், லியோ மார்கா ஆஸ்ரம், 121/1, புனித தோமையார் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2004. (சென்னை 600014: தி பார்க்கர், 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை).

352 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1500., அளவு: 22.5×14.5 சமீ.

அருட்தந்தை ச.கீதபொன்கலன் அவர்கள் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி, சரிநிகர், நவமலையகம் மற்றும் சர்வதேச சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். மக்கள் இயக்கங்கள், பெருந்தோட்டத்துறையும் தனியார் மயமும், மலையகமும் அரசியலும், தீராத பிரஜாவுரிமையும் தீர்க்காத சட்டங்களும், காணி வீட்டு உரிமையின் மீதான சவால்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தங்களும் சம்பள உடன்படிக்கைகளும், மலையகத் தமிழ்ப் பெண்களின் அரசியல் வலுவூட்டல், மலையகத்தை மலடாக்கும் குடும்பக் கட்டுப்பாடு, மலையகத் தமிழ்ச் சிறுவர்களுக்கு எட்டாத உரிமைகளும் கிட்டாத முன்பள்ளிக் கல்வியும், மலையகத்தில் முதியோர் எதிர்கொள்ளும் சவால்கள், தொழிலாளர் உரிமையும் தென்னிலங்கைத் தமிழரின் சுயநிர்ணய உரிமையும், மலையகத் தமிழ் மக்களுக்கு சவாலாக உள்ள மேல் கொத்மலைத் திட்டம், சர்வதேச அரங்கில் மலையகம், உலக சமூக மாமன்றம், ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக ஒரு குடும்பத்தின் பிரஜாவுரிமைப் பத்திரம், உலக சமூக மாமன்றத்தின் கொள்கைகள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் 2000 அக்டோபர் 25ம் திகதியில் பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில், அரசாங்கப் பாதுகாப்பில், தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளையில், ஊர்மக்களின் திட்டமிட்ட இனவெறித் தாக்குதலுக்குள்ளாகிக் கொல்லப்பட்ட 29 தமிழ் இளைஞர்களுக்கும் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36339).

ஏனைய பதிவுகள்

15304 தேவசகாயம்பிள்ளை (நாட்டுக்கூத்து).

புலவர் ஸ்ரீ முத்துக்குமாரு (மூலம்), மு.வி.ஆசீர்வாதம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மு.வி.ஆசீர்வாதம், ஆசீர் அகம், 29, கண்டி வீதி, 2வது பதிப்பு, செப்டெம்பர் 1974, 1வது பதிப்பு, 1926. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி

12332 – பெற்றோர் அறிய வேண்டியவையும் மாணவர் பிரச்சனைகளும்.

சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. கனடா: சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி, டொரன்ரோ, 1வது பதிப்பு, 2008. (கனடா: Fine Copy Printing, Toronto). ii (12), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ. புலம்பெயர்ந்த நாடுகளில்

11524 ஸூலைமான் அரசரின் வைரச் சுரங்கம்.

எச்.ரைடர் ஹக்கார்ட் (ஆங்கில மூலம்), ஸீ.எம்.ஏ.அமீன் (தமிழாக்கம்). கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ், 262 A, கண்டிவீதி). viii, 232