9965 இலங்கை இந்தியர் சரித்திரச் சுருக்கம்.

கலகா பெ.தங்கராசா. கண்டி: கலகா பெ.தங்கராசா, மாலதி வெளியீட்டு இல்லம், 57, அம்பிட்டிய வீதி, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 10: ஓட்டோ பிரின்டர்ஸ்).

(9), 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இலங்கை இந்தியர், இலங்கை அரசியலும் இந்தியர் நிலையும், இந்தியர் சமுதாயம் ஆகிய மூன்று பிரதான தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை இந்தியர் என்ற முதலாம் இயலில் பழங்கால வரலாறு, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்கள், கண்டி மன்னர்கள், ஆங்கிலேயர் காலம், மலைநாட்டு இந்தியர் தோட்டங்களில் தொழில்புரிய வந்த வரலாறு, அக்கால வைத்திய வசதிகள், இந்தியர் வருகையைத் தடைசெய்தல், இலங்கை இந்தியப் பிரச்சினை, வாஜ்பாய்-சேனநாயக்க பேச்சுவார்த்தை, இரப்பர் தோட்டங்களுக்குத் தொழிலாளர் வருகை, இந்தியர் பாக்கிஸ்தானியர் சட்டம், நாடற்றவராதல், இந்தியருக்குத் தனித்தேர்தல் தொகுதி, ஸ்ரீமா பண்டாரநாயக்க தேசிய அரசாங்கம், இலங்கை இந்திய வர்த்தக ஒப்பந்தம் ஆகிய விடயங்கள் பேசுபொருளாகின்றன. இரண்டாவது இயலில் சென்னை அரசின்கீழ் இலங்கை, காலனியாட்சி, மாட்சிமை தங்கிய அரசசபை, கோல்புருக் கமரன் வருகை, புதிய சட்டசபையும் நீதிமன்றமும், பொதுஜன வாக்குரிமை, புதியதோர் சட்டசபை, இந்தியர் பிரதிநிதித்துவம், டொனமூர், சோல்பரி கமிஷனர்களின் வருகை, இந்தியர் வாக்குரிமை பறிபோதல் ஆகிய விடயங்கள் பேசப்படுகின்றன. இந்தியர் சமுதாயம் என்ற மூன்றாவது இயலில் இந்தியரின் வாழ்க்கைப் பிரச்சினை, இலங்கை இந்திய காங்கிரஸ், தொழிற்சங்கப் பிளவு, பிரசாவுரிமைச் சட்டம், இலங்கையின் சுதந்திரம், குடியிருப்பு, தோட்டத் தொழிலாளர்களும் உள்ளுராட்சி மன்றங்களும், இந்தியத் தொழிலாளர் குடியேற்றும் சபை, சம்பள நிர்ணய சபை, தொழிலாளர் கல்வி, தொழில் கோடுகள் (கோர்ட்டுகள்) போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10724).

ஏனைய பதிவுகள்

Gokkasten Scratchmania Nederlandse

Grootte Welkomstbonus Gedurende Koningskroon Bank Oranje Casino Opschrijven Jacks Mathias Scratchmania Inspired Gokhuis Gokkasten Nederlandse Scratchmania Gokhal Andy Sports Fans va poker, tafelspellen of totdat