9967 கண்ணுக்கு எட்டிய தொலைவில்.

லசந்த விஜயரத்தின (தொகுப்பாசிரியர்).கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதான பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு: டனிஸ் டெவலப்மன்ட் கோபரேஷன்).

xix, 93 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1274-33-7.

சுனாமி நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் பொருட்டும், கிழக்கிலங்கையின் நிலவரத்தைக் கண்டுவரும் நோக்குடனும் தெற்கிலிருந்து சென்ற  ஊடகவியலாளர் குழுவின் தரிசனங்கள் இக்கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றன. இனஉறவைக் கட்டி எழுப்பி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்போம் (எஸ்.பி.நாதன்), களக் குறிப்பு (சமன் செனெவிரத்ன), ஆசிரியர் குறிப்பு (லசந்த விஜயரத்ன), நாட்டில் நல்வாழ்வைக் கட்டியெழுப்புவதென்றால் (ஆரிதாச கொடித்துவக்கு), சமாதானமாக ஒன்றிணைந்து போரிடுவோம் (எம்.பி.சந்திரபால), சமாதான ஒப்பந்தத்துக்கு மாற்று அணுகுமுறை தேவை (P.D.லியனகே), திருக்கோணமலையிலிருந்து பாதுகாப்புப் படையினரை வெளியேற்றல் (K.W.குணவர்த்தன), கிழக்கு விஜயத்தில் நான் பெற்ற அனுபவங்கள் (D.J.விஜயசிங்க), சமாதானம் இல்லாத சமாதானம் (L.Y.சுஜித்குமார), யுத்தத்தின் பலாபலன்களை அனுபவிக்கும் கிழக்கு மக்கள் (ஜயதிஸ்ஸ தென்னக்கோன்), சுனாமி நிவாரணம் பகிர்ந்தளிப்பதில் கிழக்கு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் (W.P.தர்மசேன), சமாதானத்தின் தாமதத்தை கிழக்கில் பார்த்தோம் கேட்டோம் (பந்துல குணசேகர), சுதந்திரத்துக்கு இடமளித்தலும் சமாதானமும் (T.K.சுகததாச), கிழக்குச் சூழலின் யதார்த்தத்தை சரியாகப் புரிந்துகொள்வோம் (மாவடவில சாந்த தேரோ), குச்சவெளி பின்தங்கிய கிராமத்தைப் பார்வையிடல் (ஜஸ்டின் கொடிகார), போராட்டம் மிலேச்சத்தனமானது (மொரகல சுமணரங்சி மகாநாயக்க தேரர்), தெற்கு ஊடகவியலாளர்களின் கிழக்குச் சுற்றுப்பயணம் (லசந்த விஜயரத்ன), தெற்கின் செய்தியாளர்கள் காணாத திருக்கோணமலை (அசோக்க சந்திரசேன), இனவாத நிலை உருவாவதன்மூலம் அதிகாரப் போட்டி அதிகரிக்கின்றது (சாந்த மகிந்தபால), கிண்ணியாவில் பெண்கள் (எஸ்.தர்மலிங்கம்) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 210258).

ஏனைய பதிவுகள்

11383 தர்மத்தில் பூத்த மலர்கள் (தோபியாஸ்): தென்மோடி நாட்டுக்கூத்து.

ம.யேசுதாசன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2004. (யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்). xvi, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-9262-27-0. கத்தோலிக்க கூத்துக்கள் பொதுவாக விவிலியக்

Casino Action Reviews

Content Casino Pocket Fruity casino – Need For Spin Online Casino Betrugstest Uk Problem Online Gambling Rate: Statistics And Facts For instance, our free spins