பொன்னம்பலம் முருகவேள். சுவிட்சர்லாந்து: வள்ளுவன் பதிப்பகம், Bumplizstrasse 48, 3027 Bern 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
271 பக்கம், வணணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19.5 சமீ.
இலங்கையின் வடபுலத்தில் உள்ள பூநகரியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குப் புலம்பெயர்ந்து சென்றவர் இந்நூலாசிரியர். 25 ஆண்டுகளின் முன் தான் வந்தடைந்த கதையையும் இதன் தொடர்ச்சியாக சுவிட்சர்லாந்தின் புலம்பெயர் வாழ்க்கை அனுபவங்களையும் அந்நாட்டில் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியும் 42 அத்தியாயங்களில் இந்நூலில் பல்வேறு பின்னணித் தகவல்களுடன் பதிவுசெய்திருக்கிறார். தன் பதிவுகளுக்கு ஆதாரமான ஏராளமான புகைப்பட ஆவணங்களையும் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.