9987 தொல்லியல் நோக்கில் கந்தரோடையும் கதிரமலையும்.

பரமு புஷ்பரட்ணம். கந்தரோடை: நிறுவுநர் அம்பலவாணர் கந்தையா நினைவுப் பேருரை, யாழ்/கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலை, கந்தரோடை, சுன்னாகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ.

சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணாக்கருள் ஒருவரான அம்பலவாணர் கந்தையா (16.6.1869-3.8.1951) அவர்கள் மறைவின் 50 ஆண்டுகளை நினைவுகூர்ந்து, அவர் தாபித்திருந்த தமிழ்ப் பாடசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிறுவுநர் நினைவுப் பேருரை 3.8.2001 அன்று நிகழ்த்தப்பட்டது. அச்சிறப்புரையினை ஆற்றியவர் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளர் பரமு புஷ்பரட்ணம் அவர்கள். அவரது உரையின் நூல்வடிவம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்