8016 நூல்தேட்டம் தொகுதி  8.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 553 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-659-350-1.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் எட்டாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு டூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 7001-8000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும். நூலின் பின்னிணைப்பாக சமகாலத்தின் அறிவுத்தேவையோடு சங்கமித்தல் என்ற தலைப்பில் பேராசிரியர் சபா.ஜெயராஜா நூல்தேட்டம் பற்றி  எழுதிய கட்டுரையும், நூலகர் என்.செல்வராஜாவின் தமிழக விஜயம் பற்றியும் நூல்தேட்டம் தொகுப்பு பற்றியுமான பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா அவர்களின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்