8028 பொதுத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் – 1.

சி.பிரணவன். யாழ்ப்பாணம்: சி.பிரணவன், 2வது பதிப்பு, டிசம்பர் 2008, 1வது பதிப்பு, மார்ச் 2008. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், 50, கல்லூரி வீதி, நீராவியடி).

viii, 122 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 390., அளவு: 27×18 சமீ.

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக க.பொ.த. சாதாரண தரத்தில் கற்கும் மாவர்களுக்கேற்ற அடிப்படை விளக்கங்களை இந்நூல் வழங்குகின்றது.  கணனி பற்றிய அறிமுகம் என்ற முதலாம் பிரிவுக்குள் – கணனியும் அதன் இயல்புகளும், தரவுமுறை வழியாக்கம், உள்ளீட்டுக் கருவிகள், முறைவழியாக்கக் கருவிகள், வருவிளைவுக் கருவிகள், தரவுக் களஞ்சிய சாதனங்கள், மென்பொருட்கள், கணினியின் தோற்றமும் வரலாறும், தகவல் வலைப்பின்னல், துறைகள், கணனி வைரஸ் ஆகிய உபதலைப்புகளும், எண் முறைமைகளும், பூலியன் அட்சர கணிதமும் என்ற பிரிவுக்குள் – எண் முறைமைகள், தரவுக் கட்டமைப்பு, பூலியன் அட்சர கணிதம், டிஜிட்டல் வகையான சுற்றமைப்புகள் ஆகிய உபதலைப்புகளும், முறைமைகள் என்ற மூன்றாம் பிரிவுக்குள்-  முறைமை, முறைமையின் கூறுகள், முறைமை வகைப்பாடு, தகவல் முறைமை, முறைமை அபிவிருத்தி வாழ்க்கை வட்டம், முகாமை மட்டங்கள், தகவல் முறைமையின் வகைகள் ஆகிய உபதலைப்புகளும், இறுதிப்பிரிவாக தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகர முதலியும் காணப்படுகின்றன. நூலாசிரியர்  யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும்  Softview Computer College, Institute of English and Computer Education (IECE) ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

17757 கடவுள் தொடங்கிய இடம்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B தாசன் வீதி, தேனாம்பேட்டை). 174 பக்கம், விலை: