பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).
172 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-02-4.
பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் பலவீனங்கள் பலமாகுமா?, அனுசரித்துப் போதல் அடங்கிப் போதல் அல்ல, பாராட்டுதல் ஒரு சுக அனுபவம், அழகு என்பது, நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், உண்மை சாஸ்வதமானது, சுயபாதுகாப்பு, விசித்திரமான மனங்கள், காதலைப் புரிந்தவன் மௌனமாகின்றான், தெரியாமை வேறு அறியாமை வேறு, மனிதத்துவ மாண்பு, முடிவு எடுத்தல், வெற்றிபெற வழிசமைப்போம், முதுமை ஆற்றாமையல்ல, அச்சமின்மையும் அறிவார்ந்த செயற்பாடும் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட 28 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.