8084 அளவையியலும் விஞ்ஞான முறையும்-2.

க.கேசவன் (இயற்பெயர்:  க.கேசவன்தாசன்). கொழும்பு 6: கோபிகா பதிப்பகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

400 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.

இந்நூலாசிரியர் கொழும்பு, இந்து மகளிர் கல்லூரியின் அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடத்தின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். உயர்தர வகுப்பு மாணவர்களிடையே விஞ்ஞான முறை பற்றியும் விஞ்ஞான மேதைகள் பற்றியும் மாணவர்களிடையே தெளிவான அறிவை உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம் பற்றியும் விஞ்ஞான முறை பற்றியும் அறிமுகம் செய்தல், விஞ்ஞான முறையின் அடிப்படைப் பண்புகள், விஞ்ஞானத்தில் சோதனை முறைகள், விஞ்ஞானக் கருதுகோள், விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்குப் பயன்படும் ஏனைய முறைகள், நிகழ்தகவு, அளத்தல், சமூக விஞ்ஞான ஆய்வு முறைகள், புள்ளிவிபரவியல், விஞ்ஞானமும் சமூகமும், விஞ்ஞானத்தின் வரலாறு, மதிப்பீட்டு விஞ்ஞானம் ஆகிய 13 பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்